Thursday, October 14, 2010

For a friend who is miles apart !



வார்த்தைகள் சொல்ல முடியாத தூரம் !

கடல் கடந்து செல்கிறாய் நம் நினைவுகளை சுமந்து
இதோ என்னோட சில நினைவுகள், சில நிகழ்வுகள்

முதல் முதலில் சிறு வயதில்
நீ வில்லு பாட்டு பாடும் பெண்ணாக
நான் ஜல் ஜல் என தாளம் போடும் பக்க வாத்தியமாக
நினைவிருக்கா ??
ஒரே வகுப்பில் போட்டாலும் பேச மறுத்து தூர விலகினோம்
நினைவிருக்கா ??
நல்லா பழக ஆரம்பித்து நெருங்கிய தோழிகள் ஆனோம்
இத்தனை நாள் எங்கு இருந்தோம் என்று நமக்குள்ளே கேட்டு கொண்டோம்
நினைவிருக்கா ??
எத்தனையோ கதைகள் பேசி வம்புகள் செய்து ஒன்றாய் சிரித்து ஒன்றானோம்
நினைவிருக்கா ??
தலையில் பேர் இடியாக காலத்தின் விதியால் சதியால் வேறு வேறு வகுப்பில் போடப்ட்டோம் என்ன செய்வது என்று தெரியாமல் இருவரும் முழித்தோம்
நினைவிருக்கா ??
நான் என் வகுப்பில் உன்னை நினைக்க நீ உன் வகுப்பில் என்னை நினைக்க
இருவர் கண்ணிலும் கண்ணீர்
நினைவிருக்கா ??
என் வகுப்பு ஆசரியரிடம் நீ எனக்காக சிபாரிசு செய்ய
சிவந்து கண்களுடன் உன் அருகில் நான் நிற்க
நினைவிருக்கா ??
நம்மிடையே ஏற்பட்ட பிரிவு வகுப்பில்தான் நம் அன்பில் இல்லை
என்று முன்னைவிட நெருக்கமானோம்
நினைவிருக்கா ??
தினமும் சாப்பாடு நேரம் எப்போ வரும் எப்போது பார்போம்
என்று எதிர்பார்த்து கடிகாரத்தை சபித்தோம்
நினைவிருக்கா ??
அந்த 30 நிமிடத்தில் இருவரும் என்ன என்னெவோ சொல்ல நினைத்து
அத்தனயும் மறந்து போனது
நினைவிருக்கா ??
காலம் போக போக நீ வேற பள்ளி நான் வேற பள்ளி
எனினும் தொடர்பு வைத்து கொண்டோம்
நினைவிருக்கா ??
இப்போதும் பார்த்து கொள்கிறோம் பல கதைகள் பரிமாரிகொல்கிறோம் அதே அன்புடன் அதே தோழமைஉடன் தினமும் பூக்கும் அதிகாலை பூக்கள் போல மலர்கிறது நமது நட்பு !!

No comments:

Post a Comment