என் /நம் வாழ்க்கையில் என்ன இல்லை ?
அழகான வீடு ,உன்ன உணவு ,
உடுத்த நல்ல உடை,படுக்க இடம்
தூங்கினால் நல்ல நித்திரை ,
அதில் கலர் கலராய் கனவுகள் .
நல்ல அம்மா , அப்பா , அக்கா ,தங்கை ,
ஒவென குரல் கொடுத்தல் ஓடி வருவதற்கு ஒன்பது பேர்
சுற்றிலும அழகான பச்சை செடி , கொடி ,
அண்ணாந்து பார்கையில் அழகிய முழுநிலா, நீல வானம் ,
கிழே நாம் ஊன்றி கொண்டிருக்க பூமி,
சுவாசிக்க காற்று அதை உணர உணார்ச்சி,
நல்லதை காண கண்கள் ,
நல்லதை செய்ய இரு கைகள் ,
நல்லதை நோக்கி செல்ல இரு கால்கள் .
இவைகளை செயல்படுத்த உயர்,நாடி,துடிப்பு,இரத்தம் என்று
எல்லாமே தேவைக்கு மேல் தான் இருக்கிறது.
அத்துடன் ஆறாவது அறிவு வேற ,
இவை எல்லாம் இருக்கவே
எதுவுமே இல்லாதது போல மனம் ஏங்குவது ஏன் !
இவ்வளவு இருந்தும் ஏதும் இல்லாதது போல
நினைப்பது நடப்பது வெட்கம் தரகூடிய செயல் ஆகும் !
இருபது நிஜம், இல்லாதது வெறும் நிழல் ,
நிழலை பிடிக்க நிஜத்தை உணர மறுக்கிறது மனது. !
Nalla irukku :)
ReplyDelete'நிழலை பிடிக்க நிஜத்தை உணர மாறுகிறது மனது' - Mutrilum Unmai