Tuesday, April 22, 2014

நீல வானம் நீயும் நானும் 


மேலே கூரை  பாக்காம  தூங்கனும்னு பல நாளா  கனவு கண்டேன் 

நிலா மீன் கொழம்பு  சோறு ஊட்ட ,

மணல் படுக்கை விரிக்க ,

கடல் காத்து தல கோத ,

நினைச்ச கனவு பழிச்சு சந்தோஷத்துல கண் சிமிட மறந்துபோனேன் 

நீல ரவிக்கை காரி மல்லி பூ சூடி கண் முன்னே காட்சி  தந்தா  
வாழ்க்கையில  மோதல் மொதலா சிரிச்ச முகத்தோட தூங்கினேன் கடலோட !!




சுடு சோறு 


நேத்து வடிச்ச சுடு சோறு வீணா போகுமுன்னு
தண்ணி ஊத்தி வெச்சோம் அலுமினிய  சட்டியில 

நடு உச்சி வெயில்ல 8 km நடந்து வந்து உள் வயறு பசியில உள் இழுக்க 
ஒரு பருக்கை கிடைக்காத நு  தேடினோம் மரத்தடியில 

குழைஞ்ச சோறு எடுத்து தண்ணி வடிகட்டி உள்ளங்கை பட மசிச்சு
தக்காளி தோக்கோடு கேளறின  சாதம் கிழே விழாம ஒரு சேர பெசஞ்
உருண்டையா  உருட்டி கொடுத்தா  ஒரு மகராசி 

 நாக்கில் எச்சி  ஊற கண்ணுக்கு  விருந்தாக தெரிஞ்ச சோறு
கைக்கு எட்டுமோ வாய்க்கு ஏட்டுமோனு   சில பேரு  

அப்படியே கையில விழுந்த உருண்டை நாக்ல படமா உல் தொண்டையில முழுங்கி
வாழை இழை  விருந்துண்ட அனுபவம் கிடைச்சது போல
 பக்கதுல இருந்தவன பார்த்து  சிரிச்சோமே  நினைவிருக்கா


தெருவோர நாய்  குட்டி 


 சொகுசா ஏசி  ஆபீஸ்ல வேலை செஞ்சு கை நிறைய பணம் பாத்து,
 சம்பாதிச்ச காச எதுக்கோ செலவழிச்சு
 கால் வலிக்க ஓடி   விளையாட  நேரம் இல்லாம
 சில பேரு Gokarna வந்தோம் 

ஏசி வண்டி Puncture ஆகி அம்புட்டு பேரையும் கிழே எறங்க வெச்சு
ஓடி விளையாட வேச்சுதாம்  தெருவோர நாய் குட்டி 


பாதை எங்கே  போகுதுன்னு தெரியாம ,
வயல் வரப்பு  ஓரம்  ,
 குருவி கீச்சலோடு
 நடந்து பொகையில 
திடு திபுன்னு எங்கிருந்தொ  வந்த  சூரியன்
 சொலிச்சாம் காலை  வணக்கம் !!