சுடு சோறு
நேத்து வடிச்ச சுடு சோறு வீணா போகுமுன்னு
தண்ணி ஊத்தி வெச்சோம் அலுமினிய சட்டியில
தண்ணி ஊத்தி வெச்சோம் அலுமினிய சட்டியில
நடு உச்சி வெயில்ல 8 km நடந்து வந்து உள் வயறு பசியில உள் இழுக்க
ஒரு பருக்கை கிடைக்காத நு தேடினோம் மரத்தடியில
குழைஞ்ச சோறு எடுத்து தண்ணி வடிகட்டி உள்ளங்கை பட மசிச்சு
தக்காளி தோக்கோடு கேளறின சாதம் கிழே விழாம ஒரு சேர பெசஞ்
உருண்டையா உருட்டி கொடுத்தா ஒரு மகராசி
தக்காளி தோக்கோடு கேளறின சாதம் கிழே விழாம ஒரு சேர பெசஞ்
உருண்டையா உருட்டி கொடுத்தா ஒரு மகராசி
நாக்கில் எச்சி ஊற கண்ணுக்கு விருந்தாக தெரிஞ்ச சோறு
கைக்கு எட்டுமோ வாய்க்கு ஏட்டுமோனு சில பேரு
கைக்கு எட்டுமோ வாய்க்கு ஏட்டுமோனு சில பேரு

No comments:
Post a Comment