நீல வானம் நீயும் நானும்
மேலே கூரை பாக்காம தூங்கனும்னு பல நாளா கனவு கண்டேன்
நிலா மீன் கொழம்பு சோறு ஊட்ட ,
மணல் படுக்கை விரிக்க ,
கடல் காத்து தல கோத ,
நினைச்ச கனவு பழிச்சு சந்தோஷத்துல கண் சிமிட மறந்துபோனேன்
நீல ரவிக்கை காரி மல்லி பூ சூடி கண் முன்னே காட்சி தந்தா
வாழ்க்கையில மோதல் மொதலா சிரிச்ச முகத்தோட தூங்கினேன் கடலோட !!


No comments:
Post a Comment