என் அருமை சுபா அக்காவிற்கு,
உங்களுக்காக நான் எழுதிய சில வரிகள் இதோ ;-)
கண்களை இருக்க மூடி தூங்கி கொண்டுஇருந்தால் எனது ரூம் மேட். உடம்பு 102 டிகிரி கொதித்து கொண்டிருந்தது . சூடாக maggie கிண்டி , வெந்நீர் வைத்து , உடம்பு இதமாக இருக்க விக்ஸ் தேய்த்து தூங்க வைத்தேன் . வேறுபாடுகள் இருவரிடமும் இருந்தாலும் மனுஷ தன்மை இன்னும் இருக்கவே அவளுக்காக உதவினேன்.
தூக்கம் எப்போது வந்தது என்று கூட தெரியாமல் தூங்கினேன். காலை 6 மணி இருக்கும் யாரோ என்னை எழுப்பவது போல ஒரு கனவு, கூக்குரலின் சத்த்ம் அதிகமாக கேட்கவே கனவு களைந்து கண்விழித்தேன். கனவு களைந்து கண் விளித்து பாதி தூக்கத்துடன் கதவை மெதுவாக தொறந்தேன் . கை நிறைய பழங்கள் ,பிஸ்கட் , மாத்திரைகளுடன் நின்று கொண்டிருந்தால் ரூம் மேட்இன் அக்கா . காய்ச்சலின் கொதிப்பு அவள் கண்களில் தெரிந்தது !
தூங்கி கொண்டு இருந்த தங்கையின் அருகே ஆதரவாய் உட்கார்ந்தாள். இரண்டு பெரும் ஹிந்தியில் எனக்கு புரியாத பாஷையில் வெகு நேரம் பேசி கொண்டு இருந்தார்கள். கதவோரம் நின்று பார்த்து கொண்டு இருந்தேன்.
பல மையில் தாண்டி தொலைவில் இருக்கும் எனது அக்காவின் நினைப்பு தட்டியது , ஒரு நொடி அவள் எனது அருகே இங்கு இருப்பது போல ஒரு குட்டி கனவு கண்டேன். எனக்கு உடம்பு சரியில்லாமல் போனால் இப்படித்தான் ஓடி வந்திருபாலோ .. ஹ்ம்ம்ம்...
ஏக்கம் பேரு மூச்சாக மாறியது ! கனவு கனவாகவே கலைந்தது !
யார் சொன்னார்கள் அம்மா மட்டும் தான் கடவுளின் அற்புது படைப்பு என்று ! அக்காவும் தான் ! இன்னோர் தாயாக , அன்பு தோழியாக எப்போதும் தோள் கொடுக்கும் ஒரு அற்ப்புத பிறவி ;-) அம்மாவுடன் கடுவுள் கொடுத்த இலவச இணைப்பு ;-)
மிஸ் யு ;-)
உங்கள் அன்பு குட்டி தங்கை நித்தியா ;-)
No comments:
Post a Comment